அக்னி மேலாண்மை மற்றும் வடிவமைப்பு கல்லூரி துவக்க விழா
அக்னி மேலாண்மை மற்றும் வடிவமைப்பு கல்லூரி துவக்க விழா
UPDATED : ஏப் 15, 2016 12:00 AM
ADDED : ஏப் 15, 2016 11:23 AM
வடமதுரை
: வடமதுரை
மோர்பட்டியில் இயங்கி வரும் அக்னி குழுமத்தின் மூன்றாவது கல்லுாரியாக அக்னி
மேலாண்மை மற்றும் வடிவமைப்பு கல்லுாரி துவக்க விழா நடந்தது.
அழகப்பா பல்கலை முன்னாள் துணை வேந்தர் கன்னியப்பன் தலைமை வகித்தார். அறங்காவலர் வள்ளிநாயகி குத்துவிளக்கு ஏற்றினார்.
முதல்வர் ஸ்ரீகாந்த் வரவேற்றார். முன்னாள் துணை வேந்தர் பேசுகையில், இங்கு பயிற்றுவிக்கப்படும் வங்கி, நிதி சேவையில் பி.காம்., படித்தால் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச்சந்தை, நிதி நிறுவனங்கள் வேலை பெறலாம். உலகளாவிய வர்த்தகத்தில் பி.பி.ஏ., படித்தால், மேலாண்மை ஆய்வாளர், இறக்குமதி, ஏற்றுமதி ஆகியவற்றில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பேஷன் டிசைன், உள்ளரங்க வடிவமைப்பில் பி.எஸ்சி., படித்தால் சுயதொழில் தொடங்கலாம், வடிவமைப்பாளராவும் உருவாகலாம். அனிமேஷனில் டிப்ளேமா படித்தால் அனிமேஷன் துறையில் நல்ல வருமானம் பெறலாம்&' என்றார்.
