UPDATED : ஏப் 16, 2016 12:00 AM
ADDED : ஏப் 16, 2016 10:36 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி
: விழுப்புரம்
மாவட்டம், கள்ளக்குறிச்சி
அடுத்த பங்காரத்தில் உள்ள, எஸ்.வி.எஸ்.,
இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லுாரி
மாணவியர் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மூவரும், கடந்த ஜனவரி, 23ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இது தொடர்பாக, கல்லுாரியின் தாளாளர் வாசுகி, அவரது கணவர் சுப்ரமணியன், மகன் சுவாகர் வர்மா, கல்லுாரி முதல்வர் கலாநிதி ஆகியோர் கைதாகி ஜாமினில் வெளியே வந்தனர். இந்நிலையில் ஆர்.டி.ஓ., சண்முகநாதன் முன்னிலையில், கல்லுாரியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
