UPDATED : ஏப் 16, 2016 12:00 AM
ADDED : ஏப் 16, 2016 10:45 AM
கோவை
: வடசித்துார், ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி.,
கல்லுாரியில், மாணவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா
நேற்று நடந்தது.
விழாவில், கல்லுாரி தாளாளர் ராமசாமி வரவேற்றார். தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். டெக் மகேந்திரா நிறுவன மூத்த துணை தலைவர் சுவாமி முன்னிலை வகித்து பேசுகையில், நல்லொழுக்கம், பொதுநல பண்புகளே ஒரு மாணவரை சிறந்த மனிதனாக்கும். திறமைக்கான வேலை நம் நாட்டுக்குள் எங்கு கிடைத்தாலும் சென்று சாதிக்கலாம். அப்போதே, நாட்டின் வளர்ச்சி மேம்படும், என்றார்.
தொடர்ந்து,
இறுதியாண்டு மாணவர்களில் வேலைவாய்ப்பை
பெற்ற, 551 பேருக்கு பணி
நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லுாரி இயக்குனர் ராஜாராம், முதல்வர் சுதா மோகன்ராம், புரோடேப்ட் நிறுவன டெலிவரி இயக்குனர்
செல்வக்குமார், குயிஸ்ட் நிறுவன
இயக்குனர் (டி.இ.ஜி.,) சுந்தரராஜன்,
பக்வான் சைபர்டெக் முதன்மை தகவல் அலுவலர்
சந்திரன், பேராசிரியர்கள்,
மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
