UPDATED : ஏப் 18, 2016 12:00 AM
ADDED : ஏப் 18, 2016 10:51 AM
புதுச்சேரி
: கொம்பாக்கம்
அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
கொம்பாக்கம்
அரசு தொடக்கப் பள்ளி மற்றும் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் நடந்த பள்ளி ஆண்டு விழாவிற்கு,
ஆசிரியர் சீனுவாசன் வரவேற்றார்.
பள்ளி தலைமையாசிரியர் தேசிங்கு தலைமை தாங்கினார். ஆசிரியர் சத்தியமூர்த்தி பள்ளியின் ஆண்டறிக்கை வாசித்தார். பெண் கல்வி பிரிவு, துணை இயக்குநர் சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
பள்ளி துணை ஆய்வாளர் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார். அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. வில்லிசை வானம்பாடிகளின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆசிரியர் செந்தில்முருகன், பால் பவன் பயிற்றுனர் அங்கப்பன், ஆசிரியை வணிதா, மணி, வெங்கடப்பிரியா, மதுமிதா ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் அர்ச்சுனன் நன்றி கூறினார்.
