விளையாட்டு பிரிவில் இட ஒதுக்கீடு இந்துஸ்தான் பல்கலை அறிவிப்பு!
விளையாட்டு பிரிவில் இட ஒதுக்கீடு இந்துஸ்தான் பல்கலை அறிவிப்பு!
UPDATED : ஏப் 18, 2016 12:00 AM
ADDED : ஏப் 18, 2016 11:10 AM
சென்னை
:
இந்துஸ்தான் பல்கலையில், விளையாட்டுப் பிரிவில் இட ஒதுக்கீடு
பெறுவதற்கான, தகுதித் தேர்வு, வரும், 29, 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
சென்னையில் உள்ள, இந்துஸ்தான் கல்வி நிறுவனம் சார்பில், ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், 2016-17ம் கல்வி ஆண்டில், இந்துஸ்தான் கல்வி நிறுவனத்தின் இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விளையாட்டுத் துறைக்கு, 200 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான தகுதித் தேர்வு, வரும், 29, 30ம் தேதிகளில், கிண்டியில் உள்ள பல்கலை வளாகத்தில் நடைபெற உள்ளது. தேசிய, மாநில மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், சாதித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தடகளம், கூடைப்பந்து, பாட்மின்டன், குத்துச்சண்டை, செஸ், கிரிக்கெட், கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், குதிரைப் பந்தயம், தற்காப்புக் கலை, படகுப் போட்டி, நீச்சல், டேபிள் டென்னிஸ் மற்றும் வாலிபால் பிரிவுகளில் ஜொலிக்கும், ஆண், பெண் என, இரு தரப்பினரும் இதில் பங்கேற்கலாம்.
தகுதியுடைய மாணவர்கள், உரிய சான்றிதழ்கள், புகைப்படத்துடன், பல்கலை வளாகத்துக்கு அன்று காலை, 9:30 மணி அளவில் ஆஜராக வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 8056296924, 9952035336 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
