தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/’ஹால் டிக்கெட்’ மறுத்த மதுரை பல்கலை உத்தரவு ரத்து

’ஹால் டிக்கெட்’ மறுத்த மதுரை பல்கலை உத்தரவு ரத்து

’ஹால் டிக்கெட்’ மறுத்த மதுரை பல்கலை உத்தரவு ரத்து


UPDATED : ஏப் 19, 2016 12:00 AM

ADDED : ஏப் 19, 2016 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 19, 2016 12:00 AM ADDED : ஏப் 19, 2016 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரி நிர்வாக சங்கம் பொதுச் செயலர் மகேந்திரவேல் தாக்கல் செய்த மனு:

எங்கள் சங்கத்தில் உதவி பெறும் மற்றும் உதவி பெறாத, 47 தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் உறுப்பினர்களாக உள்ளன; இக்கல்லுாரிகள், மதுரை காமராஜ் பல்கலையால் இணைவிப்பு வழங்கப்பட்டவை. ஒரு பட்டப் படிப்பை சம்பந்தப்பட்ட கல்லுாரி நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் முன், உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தகுதியை ஆய்வு செய்ய பல்கலை, குழு அமைக்கும். குழு பரிந்துரையின் படி,பட்டப் படிப்பிற்கான இணைவிப்பு கட்டணத்தை கல்லுாரி நிர்வாகம் செலுத்துமாறு, பல்கலை உத்தரவிடும்.

பல்கலை ஒப்புதலுக்குப்பின், கல்லுாரியானது தொடர்ந்து, குறிப்பிட்ட பட்டப் படிப்பை நடத்தலாம். பல்கலை விதிகள் படி, கட்டணம் நிர்ணயம் தொடர்பான நடவடிக்கை ரத்து செய்யப்படும் வரை அல்லது திரும்பப் பெறப்படும் வரை பட்டப் படிப்பை நடத்தலாம். அக்கல்லுாரி மாணவர்கள் தேர்வில் பங்கேற்று, பல்கலை வழங்கும் பட்டம் பெறலாம்.

கடந்த, 2006, மார்ச் 6ல் பல்கலை சிண்டிகேட் கூட்டம் நடந்தது. அத்தீர்மானத்தின் படி, 2006, மே, 16ல் பல்கலை ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில். 2014ல் ஜூலை, 16ல், 47 கல்லுாரிகளுக்கும் பல்கலை ஒரு கடிதம் அனுப்பியது.

அதில், பட்டப் படிப்புகளுக்கான இணைவிப்பை புதுப்பிக்க, புதிதாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளங்கலைக்கு, 50 ஆயிரம், பி.எட்., 2 லட்சம், முதுகலை 5 லட்சம், எம்.பில்., 25 ஆயிரம், எம்.எட்., படிப்பிற்கு 2 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பட்டப் படிப்பிற்கான இணைவிப்பு கட்டணத்தை, 2006ல் உயர்த்தி, பல்கலை உத்தரவு பிறப்பித்த போதும், அதுபற்றிய விவரம், 2014ல் தான் எங்கள் கல்லுாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கு நிரந்தர இணைவிப்பு கட்டணம் வசூலிக்க அதிகாரம் இல்லை. தற்காலிகம், நிரந்தர இணைவிப்பு என்ற நடைமுறையே இல்லை. தற்காலிக இணைவிப்பிற்காக, ஒவ்வொரு பட்டப் படிப்பிற்கும் ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என 2006ல் பல்கலை உத்தரவிட்டது. அது எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு, 2014ல் தான் தெரிவிக்கப்பட்டது.

இக்கட்டணத்தை செலுத்தினால் தான், 2016, ஏப்ரல், 21ல் துவங்கும் தேர்வில் பங்கேற்க, மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் வழங்கப்படும் என, பல்கலை, 2016, மார்ச், 30ல் உத்தரவிட்டது; அது, சட்டவிரோதம். அதையும், 2006ல் பல்கலை பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும். ஹால் டிக்கெட் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மகேந்திரவேல் மனு செய்திருந்தார். நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐசக்மோகன்லால் ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் சங்கத்திலுள்ள கல்லுாரிகளில்
, புதிய இணைவிப்பு கட்டணத்தை இதுவரை பல்கலைக்கு செலுத்தாத கல்லுாரிகள், 2015 - 16க்கு உரிய கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும். புதிய கட்டணம் தொடர்பாக மனுதாரர் மற்றும் பல்கலை தரப்பில், மே 31க்குள் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும். 

மாணவர்களை, தேர்வு எழுத அனுமதிப்பதாக பல்கலை உறுதியளித்துள்ளது. அதை இந்நீதிமன்றம் பதிவு செய்கிறது. ஹால் டிக்கெட் வழங்க மறுத்த பல்கலை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை பைசல் செய்கிறேன். நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us