தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது!

சட்ட துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது!

சட்ட துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது!


UPDATED : ஏப் 19, 2016 12:00 AM

ADDED : ஏப் 19, 2016 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 19, 2016 12:00 AM ADDED : ஏப் 19, 2016 11:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
:
 சட்ட துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசினார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் எட்டாவது பட்டமளிப்பு விழா, நேற்று, சென்னை பல்கலையின் நுாற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. அதில், மாணவர்களுக்கு, தமிழக கவர்னர் ரோசையா பட்டங்களை வழங்கினார்.

விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசியதாவது:

கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வரும் சூழலில், சட்ட துறையிலும், அது எதிரொலித்து வருகிறது. கீழமை நீதிமன்றங்களில் கற்பித்தல் மற்றும் சட்டம் சார்ந்த கடமை ஆற்றுதல் உள்ளிட்டவற்றில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டில்லி சிவில் நீதிபதிகள் தேர்வில், 73 சதவீத பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்திலும், 50 சதவீதத்தை நோக்கி பெண்களின் எண்ணிக்கை சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us