தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்புகள்!

ஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்புகள்!

ஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்புகள்!


UPDATED : ஏப் 28, 2016 12:00 AM

ADDED : ஏப் 28, 2016 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2016 12:00 AM ADDED : ஏப் 28, 2016 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜிப்மர் பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், 75 பி.எஸ்சி., நர்சிங் இடங்கள் உள்ளன. இதுமட்டுமின்றி, அனஸ்தீசியா, கார்டியாக் லேபரேட்டரி டெக்னாலஜி, டயாலிஸ் டெக்னாலாஜி, ரேடியோ டயாகனைஸ், எம்.எல்.டி., பிளட் பேங்கிங், நியூரோ டெக்னலஜி, நியூக்ளியர் மெடிக்கல் டெக்னாலாஜி, ஆபரேஷன் தியேட்டர் அனஸ்தீசியா டெக்னாலஜி, பெர்பிஷன் டெக்னாலஜி, ரேடியோதெரபி டெக்னாலஜி உள்ளிட்ட பி.எஸ்சி., துணை மருத்துவ படிப்புகளில் தலா 4 இடங்கள் உள்ளன.நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ஒட்டுமொத்தமாக 154 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான ஆன்-லைன் விண்ணப்பங்கள், www.jipmer.edu.in இணையதளத்தில் வினியோகிக்கப் பட்டு வருகிறது.

ஜூன் 8ம் தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஹால் டிக்கெட்டுகளை ஜூன் 29ம் தேதி முதல் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

நுழைவுத்தேர்வு

நர்சிங் நுழைவுத் தேர்வு, ஜூலை 10ம் தேதி காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை, சென்னை, புவனேஸ்வர், காந்தி நகர், ஜம்மு, மும்பை, புதுச்சேரி, ராஞ்சி, திருவனந்தபுரம், சோனிபட் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது. நுழைவுத்தேர்வு, 90 நிமிடங்களுக்கு நடக்கும். பொது, ஓ.பி.சி., பிரிவினருக்கு 600 ரூபாய், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 400 ரூபாய். மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டண விலக்கு உண்டு.

மாற்றுதிறனாளிகள் தங்களுடைய மருத்துவ சான்றிதழ்களை, விண்ணப்பத்துடன் இணைத்து ஜூன் 26ம் தேதிக்குள் பதிவாளர், ஜிப்மர் நிர்வாக கட்டடம், புதுச்சேரி-605006 என்ற முகவரிக்கு அனுப்பி, கட்டண விலக்கு பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us