தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலையில்லா திண்டாட்டம் இந்தியாவில் அதிகரிக்கும்

வேலையில்லா திண்டாட்டம் இந்தியாவில் அதிகரிக்கும்

வேலையில்லா திண்டாட்டம் இந்தியாவில் அதிகரிக்கும்


UPDATED : ஏப் 29, 2016 12:00 AM

ADDED : ஏப் 29, 2016 09:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2016 12:00 AM ADDED : ஏப் 29, 2016 09:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

யு.என்.டி.பி., எனப்படும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் வெளியிட்டுள்ள, ஆசிய பசிபிக் மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

  • கடந்த, 1991 முதல்,2013ம் ஆண்டு வரை எடுக்கப்பட்டுள்ள கணக்கின்படி, இந்தியாவில் வேலை பார்க்கும் வயதை எட்டிய, 30 கோடி பேரில், 14 கோடி பேருக்கு மட்டுமே வேலைகிடைத்துள்ளது
  • தற்போது சராசரியாக, ஒரு மாதத்துக்கு, 10 லட்சம் பேர் வேலையில் சேருகின்றனர்
  • வேலை பார்க்கக் கூடிய வயது பிரிவில் உள்ளவர்களில், மூன்று கோடி பேர், மேல்படிப்பு படிக்கின்றனர்
  • வரும், 2050ல், மேலும், 28 கோடி பேர், வேலை பார்க்கும் வயது பிரிவை எட்டுவர்
  • மக்கள்தொகை அதிகமாக உள்ள இந்தியாவில், அதிக அளவு மக்கள் கிராமங்களில்இருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து வரும் நிலையில், அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்
  • சீனாவில், உற்பத்தி துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான், அங்கு, ஏழ்மை குறைந்துள்ளது
  • இந்தியாவில், உற்பத்தி துறையின் பங்கு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 15 சதவீதம் மற்றும் வேலைவாய்ப்பில், 11 சதவீதமாக மட்டுமே உள்ளது
  • உற்பத்தி துறையில் அதிக வளர்ச்சியை அடைந்தால் தான், எதிர்காலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us