காந்திகிராம் பல்கலையில்15வது உலக தமிழ் இணைய மாநாடு!
காந்திகிராம் பல்கலையில்15வது உலக தமிழ் இணைய மாநாடு!
UPDATED : ஏப் 30, 2016 12:00 AM
ADDED : ஏப் 30, 2016 10:49 AM
சென்னை
: திண்டுக்கல்,
காந்திகிராம் பல்கலையில், 15வது உலக தமிழ் இணைய மாநாடு, செப்., 9ல் துவங்கி, மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இது குறித்து, பாரத் பல்கலை துணைவேந்தர் பொன்னவைக்கோ, காந்திகிராம் பல்கலை துணைவேந்தர் நடராஜன், உத்தமம் அமைப்பின் தலைவர் நேரு, இயக்குனர் செல்வமுரளி ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி:
திண்டுக்கல்,
காந்திகிராம் பல்கலையில், 15வது உலக தமிழ் இணைய மாநாடு, செப்., 9ல் துவங்கி, 11 வரை, மூன்று நாட்கள் நடக்கிறது. அதில், தமிழும் அறிவார்ந்த பொருட்களும், அச்சு, புகைப்பட மற்றும் ஓலைச்சுவடிகளுக்கான
எழுத்துணர்வி தொழில்நுட்பம், மருத்துவ தமிழ் கணிமை தொழில்நுட்பம் உள்ளிட்ட கருப்பொருட்கள் குறித்து ஆராயப்படும்.
சொற்பிழை,
சந்திப்பிழை, இலக்கணம் உள்ளிட்டவற்றை திருத்தும் இயல்மொழி பகுப்பாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துரு
பகுப்பான்கள், தமிழ் பேச்சு பகுப்பாய்வு, மின் அகராதி அமைத்தல், தமிழ் கல்வி,
தமிழ் இணையம், வலைப்பூக்கள், விக்கிபீடியா உள்ளிட்ட மின்
பகுப்பாய்வு குறித்த பொருட்களில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
கட்டுரையின்
உட்பொருள் குறித்து, இரண்டு பக்க சுருக்கம், மே, 15க்குள்ளும்; முழு கட்டுரை, ஜூன், 15க்குள்ளும், cpc2016@infitt.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். சிறந்த கட்டுரைகளுக்கு
ரொக்கப்பரிசு உண்டு.
மாநாட்டில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக, குறுஞ்செயலி உருவாக்கம், இணைய பயிற்சி, மொழியியல், வலைப்பதிவு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். தமிழ் கணினி கண்காட்சியும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு, 99430 94945 என்ற எண்ணிலோ, helpdesk@infitt.org என்ற மின்னஞ்சலிலோ தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
