UPDATED : மே 03, 2016 12:00 AM
ADDED : மே 03, 2016 01:43 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி
:
அரசு துவக்க பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
முத்தியால்பேட்டை
சோலைநகர் அரசு துவக்க பள்ளியில் முன் மழலையர் மற்றும் துவக்க பள்ளி இறுதியாண்டு
தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
ஆசிரியை விஜயா வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியை பார்வதி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்தி பேசினர். பள்ளி துணை ஆய்வாளர் வட்டம்-1 ஜெயசெல்வி, மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
