தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமஸ்கிருத பயிற்சி இன்று துவங்குகிறது

சமஸ்கிருத பயிற்சி இன்று துவங்குகிறது

சமஸ்கிருத பயிற்சி இன்று துவங்குகிறது


UPDATED : மே 04, 2016 12:00 AM

ADDED : மே 04, 2016 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 04, 2016 12:00 AM ADDED : மே 04, 2016 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: இலவச சமஸ்கிருத பயிற்சி முகாம், திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், இன்று துவங்கி, 10 நாட்களுக்கு நடைபெறுகிறது; ஆர்வமுள்ளவர்கள், பங்கேற்கலாம்.

தமிழக சமஸ்கிருத பாரதி அமைப்பு, இலவச சமஸ்கிருத பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது. தென்மாவட்ட அளவிலானோருக்கான, 10 நாள் சமஸ்கிருத பயிற்சி முகாம், திருப்பூர் தாராபுரம் ரோடு விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், இன்று காலை துவங்குகிறது. இம்முகாமில் தங்கி பயிற்சி பெறுவதற்காக, திருப்பூர், கோவை, ஈரோடு, திருச்சி, மதுரை, தேனி உட்பட, 21 மாவட்டங்களை சேர்ந்த, 250 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு, தினமும் காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை, தொடர் சமஸ்கிருத பயிற்சி வகுப்பு நடத்தப்படும். சமஸ்கிருத மொழி புலமைமிக்க, 50 பேர், இப்பயிற்சியை அளிக்க உள்ளனர்.

மொழி ஆர்வம் மிக்கவர்களுக்காக, தினமும் மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை, இலவச சிறப்பு சமஸ்கிருத பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது; 13 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். வரும், 14 வரை நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில், சமஸ்கிருத அறிவியல் கண்காட்சியும் நடைபெற உள்ளது. 

சமஸ்கிருத நூல்களில் உள்ள கணிதம், வான சாஸ்திரம் சார்ந்த நூல்கள், பல்வேறு படைப்புகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 93632 22184 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us