தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/89 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு

89 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு

89 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு


UPDATED : மே 04, 2016 12:00 AM

ADDED : மே 04, 2016 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 04, 2016 12:00 AM ADDED : மே 04, 2016 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை
: உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் வட்டாரத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த கணக்கெடுப்பில், 89 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

பொருளாதாரம் மற்றும் குடும்பச்சூழல் காரணமாக, குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் இடைநிற்றலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையை முற்றிலுமாக தவிர்க்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆண்டுதோறும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆய்வில் ஈடுபட்டு, கண்டறியப்படும் குழந்தைகளை ஜூன் மாதத்தில் பள்ளியில் சேர்க்கின்றனர். ஆசிரியர் பயிற்றுனர்கள் தேர்தல் பணியிலும் ஈடுபட இருப்பதால், நடப்பாண்டு ஆய்வு நடத்துவது கேள்விக்குறியாகவே இருந்தது.

இதையடுத்து கல்வித் துறையின் உத்தரவு வந்ததையடுத்து, கடந்த ஏப்., 5ம் தேதி முதல் ஆய்வுகளை துவக்கினர். உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் பகுதியிலும் ஆய்வுகள் ஏப்., 5ம் தேதி துவங்கி, இன்று, 4 ம்தேதி வரை நடக்கிறது.

இதுவரை உடுமலையில், 38 பள்ளி செல்லா குழந்தைகள், 9 பிற மாநில குழந்தைகளும் மற்றும் 18 மாற்றுத்திறனாளிகள், குடிமங்கலத்தில், 19 பள்ளி செல்லா குழந்தைகளும், மடத்துக்குளத்தில், 23 பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் 16 மாற்றுத்திறனாளி குழந்தைகளும் கண்டறியப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள், கல்வி ஆர்வலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். 

கடந்தாண்டு கண்டறியப்பட்டுள்ள, பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பின் அடிப்படையில், நடப்பாண்டு எண்ணிக்கை சரிவடைந்துள்ளதாக ஆசிரியர் பயிற்றுனர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us