தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை கோரி வழக்கு

பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை கோரி வழக்கு

பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை கோரி வழக்கு


UPDATED : மே 05, 2016 12:00 AM

ADDED : மே 05, 2016 11:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2016 12:00 AM ADDED : மே 05, 2016 11:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: அங்கீகாரம் இல்லாத
, 746 பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கவும், அந்த பள்ளிகளை மூடவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் முதல் வாரத்திற்கு, உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. சென்னையைச் சேர்ந்த, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன், தாக்கல் செய்த மனு: 

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வரும் பள்ளிகளை, இந்த கல்வி ஆண்டுக்குள் மூடிவிடவும், அந்த பள்ளி மாணவர்களை, அருகிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கவும் கோரி வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கை, உயர் நீதிமன்றம் விசாரித்தது. 2016  மே மாதம் வரை, 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு, தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. மேற்கொண்டு அதை நீட்டிப்பதற்கு வாய்ப்பு இல்லை என, உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

அனுமதிக்க கூடாதுபள்ளிக்கல்வி துறை முதன்மை செயலருக்கு, மார்ச் மாதம் மனு அனுப்பினேன். மே மாதத்துடன் அங்கீகாரம் முடியும், 746 பள்ளிகளின் பெயர் மற்றும் முகவரியை இணைய தளத்தில் ெவளியிடவும், அந்த பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்கவும் கோரியிருந்தேன்.

மே மாதத்துக்கு பின், 746 பள்ளிகளும் இயங்க அனுமதிக்க கூடாது. ஏனென்றால், ஏற்கனவே அவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய தற்காலிக அனுமதி தான் வழங்கப்பட்டது.

இந்த பள்ளிகள் கட்டட விதிமுறைகளையும், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தரத்தையும் பூர்த்தி செய்யாததால், அவற்றுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது. எனவே, அங்கீகாரம் பெறாத, 746 பள்ளிகளின் பெயர்களையும், முகவரியையும், பள்ளிக்கல்வி இயக்குனரக இணையதளத்தில் ெவளியிட வேண்டும்.

பள்ளிகளை மூட...அந்த பள்ளிகளில், புதிதாக மாணவர்களை சேர்க்க தடை விதிக்க வேண்டும். மேலும், அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூடுவதற்கும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் சசிதரன், விமலா அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அவகாசம் கோரியதை தொடர்ந்து விசாரணையை, ஜூன் 1ம் தேதிக்கு, டிவிஷன் பெஞ்ச் தள்ளி வைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us