மருத்துவ பொது நுழைவுத்தேர்வு; ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு; ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
UPDATED : மே 05, 2016 12:00 AM
ADDED : மே 05, 2016 11:21 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்
:
மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி மருத்துவர்
சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ படிப்புகளில் சேர, நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல் அரசு மருத்துவமனை முன் நேற்று, மாலை, 6 மணிக்கு நடந்தது.
சங்கச் செயலாளர் விவேகானந்தன் தலைமை வகித்தார். இதில், மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
