தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி வாகன ஆய்வு; ஆர்.டி.ஓ., ‘கப்சிப்’

பள்ளி வாகன ஆய்வு; ஆர்.டி.ஓ., ‘கப்சிப்’

பள்ளி வாகன ஆய்வு; ஆர்.டி.ஓ., ‘கப்சிப்’


UPDATED : மே 09, 2016 12:00 AM

ADDED : மே 09, 2016 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2016 12:00 AM ADDED : மே 09, 2016 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வி நிறுவனங்களின் பஸ்கள் குறித்த ஆய்வை, இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என, தமிழக போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. வாகன ஆய்வின்போது, வாகன படிக்கட்டு, அவசரகால கதவு, முதலுதவி பெட்டி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, டிரைவர் மற்றும் உதவியாளர் உடல் தகுதியை ஆர்.டி.ஓ.,க்கள், பரிசோதித்து, தகுதிச்சான்று வழங்குவர்.

நடப்பு ஆண்டுக்கான முதல்கட்ட பரிசோதனை, ஏப்., இறுதியில் துவங்கியிருக்க வேண்டும். சட்டசபை தேர்தல் காரணமாக, தாமதம் ஏற்பட்டது. எனினும், கோவை மாவட்டத்தின் சில பகுதிகள், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உள்ளிட்ட இடங்களில், பள்ளி வாகன ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் பல்லடத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பள்ளி வாகனங்கள் எப்போது பரிசோதிக்கப்படும் என்பது குறித்து, இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. இது, பள்ளி நிர்வாகங்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த கல்வியாண்டு துவங்க, 21 நாட்களே உள்ளன. அடுத்த வாரம், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை என, நாட்கள் நகர்ந்து விடும். 

குறுகிய கால இடைவெளியில், பள்ளி வாகன ஆய்வை முடிக்க வேண்டும்; இதுகுறித்த தேதியை, ஆர்.டி.ஓ.,க்கள் அறிவிக்க வேண்டும் என்ற, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us