தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடக்கக் கல்வி பட்டய தேர்வு; தனிதேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டய தேர்வு; தனிதேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டய தேர்வு; தனிதேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : மே 10, 2016 12:00 AM

ADDED : மே 10, 2016 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2016 12:00 AM ADDED : மே 10, 2016 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி
: 
தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு, தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என, கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

ஜூன், 2016 தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள, கணினி புகைப்படக் கருவிகள் (வெப் கேமரா) மூலமாக, போட்டோ எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கேயே போட்டோவுடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர், தேர்வு கட்டணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

எனவே, தனித்தேர்வர்கள் அலைச்சலின்றி விண்ணப்பிக்க, கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை அணுகலாம். தேர்வு கட்டணமாக, ஒவ்வொரு பாடத்துக்கும், 50 ரூபாயும், மதிப்பெண் சான்றிதழுக்காக முதலாமாண்டு, 100 ரூபாயும், இரண்டாம் ஆண்டுக்கு, 100 ரூபாயும் பதிவு மற்றும் சேவை கட்டணமாக, 15 ரூபாயும், ஆன்லைன் பதிவுக் கட்டணமாக, (ஒரு விண்ணப்பத்திற்காக) 50 ரூபாயும் செலுத்த வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும், 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியற்ற தேர்வர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்படுமெனில், முன்னறிவிப்பின்றி தேர்வு அனுமதி ரத்து செய்யப்படும். தபால் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us