தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சூரியனை புதன் கடக்கும் நிகழ்வு; பிரமித்த பள்ளி மாணவர்கள்

சூரியனை புதன் கடக்கும் நிகழ்வு; பிரமித்த பள்ளி மாணவர்கள்

சூரியனை புதன் கடக்கும் நிகழ்வு; பிரமித்த பள்ளி மாணவர்கள்


UPDATED : மே 10, 2016 12:00 AM

ADDED : மே 10, 2016 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2016 12:00 AM ADDED : மே 10, 2016 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: புதன் கிரகம்
, சூரியனின் விட்டத்தை கடக்கும் நிகழ்வை காணும் நிகழ்ச்சி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், செஞ்சுரி பவுண்டேசன் பள்ளியில், நேற்று நடந்தது.

புதன் கோள், சூரியனின் விட்டத்தை கடக்கும் நிகழ்வு, நேற்று மாலை, 4:30 மணியில் இருந்து, 6:28 மணிக்குள் நடந்தது. இதை காண்பதற்கான ஏற்பாடு, திருப்பூர் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளியில் செய்யப்பட்டிருந்தது. டெலஸ்கோப், ஊசி துளை கேமரா, சிறிய பந்து மூலம் சூரிய ஒளி பிம்பத்தை எதிரொளிப்பு செய்து, சுவற்றில் காணும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவுரவ தலைவர் ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் ராமூர்த்தி, தாளாளர் சக்திதேவி உட்பட, பள்ளி மாணவ, மாணவியர் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

முன்னதாக, பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் பள்ளியில், இதுகுறித்த விளக்க கூட்டம் நடந்தது. பள்ளி முதல்வர் கவுசல்யா வரவேற்றார். இணை செயலாளர் சரண்யா முன்னிலை வகித்தார். அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் உமாசங்கர்,

இந்நிகழ்வு குறித்து பேசியதாவது:

சூரிய குடும்பத்தில், சூரியனுக்கு மிக அருகே உள்ளது, மெர்க்குரி என்கிற புதன் கிரகம்; சூரியனில் இருந்து, 58 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதன் விட்டம், 4,878 கிலோ மீட்டர். புதன் கிரகம், இரும்பு துகள்களால் ஆனது. சூரியனை மணிக்கு, ஒரு லட்சத்து, 73 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில், ஒரு முறை சுற்றி வர, 88 நாட்களாகிறது. புதன் கிரகத்துக்கு, நாசா விண்வெளி மையத்தில் இருந்து, 2008, 09ம் ஆண்டில் அனுப்பிய மெசஞ்சர் செயற்கைகோள், 2011ல் சென்றடைந்து, அதை சுற்றி வருகிறது.

புதன் கிரகம், சூரியனின் விட்டத்தை கடக்கும் வானியல் நிகழ்வின்போது, சூரியன், புதன் மற்றும் பூமி ஆகியவை, ஒரே நேர்கோட்டில் சந்திக்கும். இதுபோல், சராசரியாக, 100 ஆண்டுகளுக்கு, 13 முறை நடக்கிறது. இதை, புதன் இடைமறிப்பு என்பர். அடுத்து, 2019, நவ., 11ல் நடைபெறும். அப்போது, இந்தியாவில் பார்க்க முடியாது. 2032ல் நடக்கும் புதன் இடைமறிப்பை காண முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us