UPDATED : மே 11, 2016 12:00 AM
ADDED : மே 11, 2016 10:28 AM
ராஜஸ்தான் மாநிலத்தில், பா.ஜ.,கட்சியின் வசுந்தரா ராஜே தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் மட்டும் தான், பசு பாதுகாப்புக்கு என, தனியாக அமைச்சகம் உள்ளது. அரசு பள்ளி பாடத் திட்டத்தில் பெரும் மாற்றம் செய்துள்ள, மாநில பள்ளி கல்வி துறை, அந்த மாற்றங்களை, இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துகிறது.
புதிய பாடத்
திட்டத்தின்படி, 5ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், இந்து கடவுளர்களின் படங்களுடன், பகவத் கீதை மற்றும் பசுவின் பெருமை குறித்த பாடங்கள் இடம்
பெற்றுள்ளன. தாய், தன் குழந்தைகளுக்கு கடிதம் எழுதுவது
போன்று, பசு எழுதும் பாடமும் இடம்பெற்றுள்ளது.
அதில், பசு தரும் பால், வெண்ணெய் மற்றும் நெய், குழந்தைகளின் உடல் நலத்தை பாதுகாப்பதாகவும், சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவை மருந்து பொருட்கள், கிருமி நாசினி தயாரிக்க உதவுவதாகவும் அந்த பாடம் அமைந்துள்ளது.
