மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து; நெல்லையில் ஜெ., வாக்குறுதி!
மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து; நெல்லையில் ஜெ., வாக்குறுதி!
UPDATED : மே 13, 2016 12:00 AM
ADDED : மே 13, 2016 11:19 AM
திருநெல்வேலி
: அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேசிய
அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும், என, திருநெல்வேலியில் முதல்வர் ஜெயலலிதா
பேசினார்.
கடந்த 2005ல் மருத்துவ நுழைவுத்தேர்வை நான் ரத்து செய்தேன். இதற்காக 2006ல் சட்டம் இயற்றப்பட்டது. ஐ.மு.கூ., அரசில் தி.மு.க., அங்கம் வகித்தபோது, தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது; தி.மு.க., அதை எதிர்க்கவில்லை. கடந்த 2013ல் உச்சநீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தாலும், காங்., அரசு மறு ஆய்வு மனு தாக்கல்
செய்தது. நான், 2014ல் பிரதமர் மோடியை சந்தித்து, மறு ஆய்வு மனுவை வாபஸ் பெறவேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
இப்போது உச்சநீதிமன்றம் தமிழக அரசின் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என பேசினார்.
