தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவக்கல்லூரி திட்டம்; தொடரும் சிக்கலால் அதிருப்தி

மருத்துவக்கல்லூரி திட்டம்; தொடரும் சிக்கலால் அதிருப்தி

மருத்துவக்கல்லூரி திட்டம்; தொடரும் சிக்கலால் அதிருப்தி


UPDATED : மே 14, 2016 12:00 AM

ADDED : மே 14, 2016 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2016 12:00 AM ADDED : மே 14, 2016 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்
: கரூர் மருத்துவக்கல்லூரிக்கு நிதி தயார்
, வாங்கல் சாலையில், 25 ஏக்கர் நிலம் தானமாக கொடுக்க தயார் நிலையில் இருந்தபோதிலும், கரூர் மாவட்ட மக்களுக்கு மருத்துவ கல்லூரி கனவு, எட்டா கனியாகிப்போனது.

தமிழக சட்டசபையில், கடந்த, 2014ல், கரூர் அரசு மருத்துவமனை, 150 மாணவர்கள் சேர்க்கையுடன் மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்தப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். கடந்தாண்டு ஏப்ரல், 14ம் தேதி மருத்துவ கல்லூரி டீன் நியமனம் செய்யப்பட்டார். 

மருத்துவமனையில், 70 டாக்டர்கள், 90 நர்சுகள் பணியாற்றுகின்றனர். மருத்துவ கல்லூரி பணியிடங்கள் காலியிடம் நிரப்புவது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்தாண்டு அக்டோபரில், கரூரில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுதல் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக, 229 கோடியே, 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். 

கரூர் மருத்துவ கல்லூரிக்கு, வாங்கல் சாலையில், 25 ஏக்கர் நிலம் தனியார் மூலம் தானமாக வழங்க தயார் நிலையில் உள்ள போதிலும், காந்திகிராமம் பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. கரூரில் மருத்துவ கல்லூரி அமைந்திருந்தால், கரூர் மாவட்டம் மட்டுமின்றி, பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியரும் பயனடைந்திருப்பர். 

மருத்துவ கல்லூரி அமையாமல், இடம் தேர்வாவதில் இருந்து, நிதி ஒதுக்கீடு செய்து செய்து பணிகள் துவங்குவது வரை, பல பிரச்னைகள் நீடிப்பதால், மக்களின் கல்லூரி கனவு நனவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us