பிளஸ்2 மதிப்பெண் மறுகூட்டல் 17, 18ல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ்2 மதிப்பெண் மறுகூட்டல் 17, 18ல் விண்ணப்பிக்கலாம்
UPDATED : மே 15, 2016 12:00 AM
ADDED : மே 15, 2016 11:22 AM
கோவை
:
பிளஸ்2 தேர்வு முடிவுகள் நாளை
மறுநாள் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு, 17, 18 ஆகிய இரண்டு நாட்களில் விண்ணப்பிக்கலாம் என, கோவை மண்டல தேர்வுத்துறை அலுவலர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் மொழிப்பாடத்துக்கு, 550 ரூபாயும், ஆங்கிலத்துக்கு, 550 ரூபாயும், பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா, 275 ரூபாய் வீதமும் செலுத்த வேண்டும். அதே போல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மொழி, ஆங்கிலம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் தலா, 305 ரூபாயும், பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா, 205 ரூபாயும் செலுத்த வேண்டும்.மாணவர்கள், விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைக்கவேண்டும்.
ஒப்புகைச் சீட்டில்குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பதிவு செய்தே விடைத்தாளின் நகலை இணையதளம் வாயிலாக, பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் முடியும். விடைத்தாளின் நகல் பெற்ற பின்பே, விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாளின் நகலுக்கு விண்ணப்பிப்பவர்கள், குறிப்பிட்ட பாடங்களுக்கு மறுகூட்டலுக்கு தற்போது, விண்ணப்பிக்க அவசியம் இல்லை. மாணவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க, பின்னர் வாய்ப்பு அளிக்கப்படும். சிறப்பு துணைத்தேர்வு குறித்து தேர்வு முடிவுகளுக்கு பின், அறிவிக்கப்படவுள்ளது.
