UPDATED : மே 18, 2016 12:00 AM
ADDED : மே 18, 2016 11:41 AM
வாடிப்பட்டி:
பாடங்களை
புரிந்து படித்ததால் மாநில ரேங்க் பெற்று சாதிக்க முடிந்தது, என, விலங்கியலில் மாநில அளவில் முதலிடம்
பெற்ற மதுரை மாணவி நேகா பரிமல் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவியான இவர், விலங்கியல், வேதியியல் பாடங்களில் 200 மதிப்பெண் பெற்றார். மேலும், தமிழ்- 185, ஆங்கிலம் - 188, இயற்பியல் 198, தாவரவியல் 197 என மொத்தம் 1168 மதிப்பெண் பெற்றார்.
அவர் கூறுகையில், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பியூர் சயின்ஸ் பிரிவை தேர்வு செய்து படித்தேன். வேதியியல், விலங்கியல் புத்தகங்களில் உள்ள அனைத்து பக்கங்களையும் புரிந்து படித்தேன். பள்ளியில் அடிக்கடி தேர்வு நடத்தியதால் பொதுத் தேர்வு எளிதாக இருந்தது, என்றார்.
இப்பள்ளியின் தாளாளரும் மாணவியின் தந்தையுமான காந்தி, முதல்வர், ஆசிரியர்கள் இவரை பாராட்டினர்.
