தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு அறிவிப்பு

தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு அறிவிப்பு

தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்பு அறிவிப்பு


UPDATED : மே 19, 2016 12:00 AM

ADDED : மே 19, 2016 11:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2016 12:00 AM ADDED : மே 19, 2016 11:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், தொழிலாளர் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. 

இங்கு, பி.ஏ., மற்றும் எம்.ஏ., தொழிலாளர் மேலாண்மை படிப்புகள், சென்னைபல்கலையால் அங்கீகரிக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்படுகின்றன. அத்துடன், பி.ஜி.டி.எல்.ஏ., எனும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பட்டயப் படிப்பு, மாலை நேர பட்டயப் படிப்பு; டி.எல்.எல்., மற்றும் ஏ.எல்., எனப்படும், தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும் என்ற பட்டயப் படிப்பு - வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு மட்டும், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகின்றன.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பட்டப் படிப்பிற்கும்; ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள், முதுநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 30ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

சென்னை, காமராஜர் சாலையில் உள்ள, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், நேரடியாக விண்ணப்பத்தை பெறலாம். தபாலில் பெற விரும்புவோர், 250 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை, &'இயக்குனர், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், சென்னை - 5&' என்ற பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, 9841192332, 9884159410, 044 - 28440102, 28445778 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us