அரசு பள்ளி மாணவ, மாணவியர் 14 பேர் 5 பாடங்களில் சென்டம்
அரசு பள்ளி மாணவ, மாணவியர் 14 பேர் 5 பாடங்களில் சென்டம்
UPDATED : மே 20, 2016 12:00 AM
ADDED : மே 20, 2016 10:54 AM
நாமக்கல்
: பிளஸ்
2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த, 17ம் தேதி வெளியானது.
அதில், நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளியை சேர்ந்த, 14 மாணவ, மாணவியர், பல்வேறு பாடங்களில், 200க்கு, 200 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதன் விவரம்
வருமாறு:
தோ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி இந்துமதி, உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மம்தா, சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஷோபியா ஆகியோர் கணிதபாடத்தில், 200க்கும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
நாமக்கல் அரசு மகளிர் பள்ளி மாணவி சுமையா சுல்தானா, வரலாறு பாடத்திலும், குமாரபாளையம் அரசு உதவி பெறும் ஜே.கே.கே., ரங்கம்மாள் மகளிர் பள்ளி மாணவி சிந்து, பொருளியல் பாடத்திலும், 200க்கு மதிப்பெண் பெற்றனர்.
குமாரபாளையம், ஜே.கே.கே., ரங்கம்மாள் மகளிர் பள்ளி மாணவியர் சிந்து, இந்துமதி, ஜேடர்பாளையம் அரசு பள்ளி மாணவி சூரியா ஆகியோர், வணிகவியலில், 200க்கு மதிப்பெண் பெற்றுள்ளனர். குமாரபாளையம் ஜே.கே.கே., ரங்கம்மாள் மகளிர் பள்ளி மாணவியர் சிந்து, கவிதா, என்.
புதுப்பட்டி அரசு பள்ளி மாணவி தீபா, சத்யா, விக்னேஷ்வரி, மாணிக்கம்பாளையம் அரசு பள்ளி மாணவர் நவீன்குமார் ஆகியோர், கணக்குப்பதிவியலில், 200க்கு, 200 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் ஆகியோர் பாராட்டினர்.
