தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ நுழைவுத் தேர்வு; மத்திய அரசு அவசர சட்டம்!

மருத்துவ நுழைவுத் தேர்வு; மத்திய அரசு அவசர சட்டம்!

மருத்துவ நுழைவுத் தேர்வு; மத்திய அரசு அவசர சட்டம்!


UPDATED : மே 20, 2016 12:00 AM

ADDED : மே 20, 2016 10:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2016 12:00 AM ADDED : மே 20, 2016 10:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்று கடந்த மாதம் மார்ச் மாதம் 7 ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மருத்துவ நுழைவு தேர்வு தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை இன்று விசாரித்த ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் உள்ளிட்டோர் அடங்கிய நீதிபதிகள் குழு, இத்தீர்ப்பை வழங்கியது. இந்த உத்தரவு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்தது.  

மேலும் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர முடிவு எடுத்துள்ளது. ஜனாதபதி ஒப்புதலுக்கு பின்னர் இது பிரகடனப்படுத்தப்படும். இதன் மூலம் மருத்து பொதுத்தேர்வு இருக்காது. பிளஸ்2 மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் தேர்வு இருக்கும். 

2016 நீட்  (என்இஇடி) நடத்தும் தேர்வு இல்லாமல் மாநில அரசு நடத்தும் தேர்வு மூலம் மருத்துவ மாணவர்கள் தேர்வு செய்யப்படலாம் என்றும் தெரிகிறது. 

தமிழகத்தில்
 
தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு, அரசு அவசர சட்டம் பிறப்பித்தால் தமிழகத்தில், இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு இருக்காது. பிளஸ் 2வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் மற்றம் பி.டி.எஸ் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us