தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரியில் உயர் மதிப்புள்ள ஆடிட்டர் படிப்பு

கல்லூரியில் உயர் மதிப்புள்ள ஆடிட்டர் படிப்பு

கல்லூரியில் உயர் மதிப்புள்ள ஆடிட்டர் படிப்பு


UPDATED : மே 21, 2016 12:00 AM

ADDED : மே 21, 2016 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2016 12:00 AM ADDED : மே 21, 2016 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை பத்மராஜம் கல்விக்குழுமம் ௧௯௯௫ல் துவங்கப்பட்டு, தொடர்ந்து விரிவாக்கம் மேற்கொண்டு, சிறந்த கல்வி நிறுவனமாக வளர்ந்து வருகிறது.

இதன் இயக்குனர் பாலன் கூறியதாவது:சர்வதேச தரத்திலான நவீன வகுப்பறை, தகுதியான, திறமையான ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. 1௦௦ சதவீத வேலைவாய்ப்பிற்கேற்ற சார்ட்டர்டு அக்கவுண்டன்ட், காஸ்ட் அக்கவுண்டன்ட், கம்பெனி செக்கரட்டரிஷிப்பட்ட மேற்படிப்புகளுடன், பி.காம்., (பி.ஏ.,) மற்றும் பி.பி.ஏ., பட்டப்படிப்புகள் தொடர்ந்து படிப்பதற்கான ஏற்பாடுகள், இக்கல்லுாரியில் உள்ளன.

ஆடிட்டர்கள், காஸ்ட் அக்கவுண்டண்டர்கள், வழக்கறிஞர்கள், சிறந்த பேராசிரியர்கள் மூலம் தொழில்சார்ந்த முறையில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதன் மூலம் சிறந்த மாணவர்களை உருவாக்கி, சமுதாயத்தில் உயர் பதவியை அடைய, அனைத்து வகையிலும் துணை புரிகிறோம்.

சி.ஏ.,- சி.எம்.ஏ.,சி.எஸ்., பட்ட மேற்படிப்புகள் முடித்தவர்களுக்கு, நல்ல சம்பளத்தில், அதிக வேலைவாய்ப்பு உருவாகி வருகிறது. இப்படிப்புகள் குறித்து மாணவர்களை ஊக்கப்படுத்துகிறோம். சிறந்த கம்ப்யூட்டர் மையம், நுாலகம், இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி எங்கள் கல்வி நிறுவனத்தின் சிறப்பம்சம்.

எங்கள் விரிவாக்கத் திட்டத்தின்படி, மதுரையில் சர்வதேச தரத்தில், வணிகவியல் கல்லுாரியை துவக்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன், டேலி இ.ஆர்.பி., ஆகியவை இலவசமாக பயிற்சியளிக்கப்படுகிறது. மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் துவங்க கல்லுாரி உதவி செய்கிறது.

சி.ஏ., சி.எம்.ஏ., சி.எஸ்., நேரடியாக படித்துக் கொண்டே பி.காம்.,(புரபஷனல் அக்கவுண்டிங்), பி.பி.ஏ., படிக்க, நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. விபரங்களுக்கு ௭௩௭௩௭ ௦௮௭௭௧ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us