தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கணித ஆசிரியர் இல்லாததால் சென்டம் வாய்ப்பு பறிபோனது

கணித ஆசிரியர் இல்லாததால் சென்டம் வாய்ப்பு பறிபோனது

கணித ஆசிரியர் இல்லாததால் சென்டம் வாய்ப்பு பறிபோனது


UPDATED : மே 21, 2016 12:00 AM

ADDED : மே 21, 2016 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2016 12:00 AM ADDED : மே 21, 2016 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: ஒண்டிபுதுார் ஆர்.சி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில்
, கணித ஆசிரியர் இல்லாததால், ஏழு மாணவிகள் கணித பாடத்தில் தோல்வியுற்று சென்டம் வாய்ப்பு கைநழுவியதாக பள்ளி தலைமையாசிரியர் பாக்கியம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒண்டிபுதுார் பகுதியில் செயல்பட்டு வரும் ஆர்.சி., பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆறு முதல் பிளஸ்2 வரை, 1,200 மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியர்களின் முயற்சியால், தனியார் பங்களிப்புடன் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், 169 மாணவர்கள் பிளஸ்2 தேர்வை எதிர்கொண்டனர். இதில், 162 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், ஏழு மாணவிகள், கணித பாடத்தில் போதிய பயிற்சியின்மையால் தோல்வியை தழுவியுள்ளனர் என்பது வேதனைக்குரியது.

கடந்த, ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இப்பள்ளியில் பணிபுரிந்து வந்த கணித ஆசிரியர் பதவி உயர்வில் சென்றுள்ளார். அதன் பின், கணித பாடங்களை முழுமையாக கற்பிக்கவும், பயிற்சி அளிக்கவும் ஆளில்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, 10ம் வகுப்பு மாணவர்களை கையாளும் இடைநிலை ஆசிரியர் சில நாட்களும், தற்காலிக ஆசிரியர்கள் என மாறி மாறி, பாடங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவே, ஏழு மாணவிகளின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

தலைமையாசிரியை பாக்கியம் கூறுகையில்
 பிளஸ்2 தேர்வில், 96 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளோம். கணித பாடம் என்பது கடினமானது. பிற பாடங்களாக இருந்தால், வேறு பாட ஆசிரியர்களை கொண்டு சமாளித்திருப்பேன். கணித பாடத்தை பயிற்சி அளிக்க, ஆண்டு முழுவதும் ஆசிரியர் இல்லை. 

தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் முன்வரவில்லை. தோல்வியுற்ற ஏழு மாணவிகளும், கணித பாடத்தால் தான் தேர்ச்சி பெறவில்லை, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us