UPDATED : மே 21, 2016 12:00 AM
ADDED : மே 21, 2016 10:53 AM
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சேர, அண்ணா பல்கலைக்கழகத்தின் கவுன்சிலிங்கில் பங்கேற்க வழிகாட்டும், தினமலர் நாளிதழின், உங்களால் முடியும் நிகழ்ச்சி, நாளை, குன்றத்தூரில் நடக்கிறது.
சென்னை அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலையில், தமிழக அரசு சார்பில், கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர்.
- இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்பது எப்படி?
- வழிமுறைகள் என்ன?
- தேவையான பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி?
என, மாணவர் மற்றும் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர். முக்கிய பாடப்பிரிவுகள் இந்த குழப்பத்திற்கும், சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் வகையில், தினமலர் நாளிதழ் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், உங்களால் முடியும் என்ற இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான, உங்களால் முடியும் நிகழ்ச்சியை, தினமலர் நாளிதழ் மற்றும், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜி நிறுவனம் இணைந்து நடத்துகின்றன.
சென்னை அருகே, குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி வளாகத்தில், நாளை காலை, 10:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது.கல்வியாளர் ரமேஷ் பிரபா, இன்ஜி., கவுன்சிலிங் விதிமுறைகளை விளக்குவார்; இன்ஜி.,கல்லூரிகளின் முக்கிய பாடப்பிரிவுகள் குறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி விரிவாக பேசுவார்.
கவுன்சிலிங்கின் விதிமுறைகள் என்ன; காலியிடங்கள், கல்லூரி விவரங்களை தெரிந்து கொள்வது எப்படி; தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவு மற்றும் கல்லூரியை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, மாணவர் மற்றும் பெற்றோரின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பதில் அளிக்கப்படும்.
தினமலர் - உங்களால் முடியும் நிகழ்ச்சியை, பூந்தமல்லியில் உள்ள ஸ்ரீ சாஸ்தா கல்வி குழுமம், முக்கிய பங்களிப்பாளராக இணைந்து நடத்துகிறது. கட்டணம் கிடையாதுநிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களில், 1,000 பேருக்கு இலவச, ரோபாட்டிக் பயிற்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளது. அதேபோல் தேர்வு செய்யப்படும், 50 மாணவர்களுக்கு, இன்ஜி., படிப்புக்கான இலவச, ஸ்காலர்ஷிப் வழங்கப்படஉள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்க எந்தகட்டணமும் கிடையாது. உணவு, பஸ் வசதி நிகழ்ச்சியில் பங்கேற்க வருவோருக்கு, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து இலவச போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி முடிந்த பின், மதிய உணவும் கல்லுாரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு செல்ல, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியின் பஸ்கள், பல இடங்களில் இருந்து புறப்படுகின்றன. அதன் விவரங்களை, 89399 17087, 86399 17080, 89399 17084 ஆகிய போன் எண்களில், இன்று முதல், நாளை காலை வரை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
