UPDATED : மே 24, 2016 12:00 AM
ADDED : மே 24, 2016 09:47 AM
மைசூரின் சத்வித்யா கல்லுாரியில், நேற்று முன்தினம் ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., தேர்வு நடந்தது. மாணவ, மாணவியர் அனைவரும் தேர்வு அறைக்கு சென்று, தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அப்போது, தேர்வு மேற்பார்வையாளர், முழுக்கை சட்டை அணிந்திருந்த மாணவர்களை, தேர்வு அறையிலிருந்து வெளியேற்றினார்.
மாணவியொருவர்
முழுக்கை கொண்ட குர்தா அணிந்திருந்தார். அவரையும், அறையிலிருந்து வெளியில் அனுப்பி, உடையை மாற்றி வரும்படி அறிவுறுத்தினார். அங்கிருந்து சென்ற மாணவி,
மீண்டும் தேர்வு எழுத வரவில்லை.
கல்லுாரி
அருகில் வசிக்கும் சில மாணவர்கள், வீட்டுக்கு சென்று அரை கை சட்டை
அணிந்து வந்தனர். வெகு தொலைவில் இருந்து வந்த மாணவர்கள், தேர்வு எழுத அனுமதி கிடைக்காமல் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.
தாமதமாக வந்த
மாணவரை, அறைக்கு வெளியே தடுத்து நிறுத்திய
மேற்பார்வையாளர், முழுக்கை சட்டை தடை செய்யப்பட்டுள்ளதை
தெரிவித்தார்.
இது என் அதிர்ஷ்டமான சட்டை. அனைத்து தேர்வுகளுக்கும் இதை தான் அணிவேன் என்று அம்மாணவர் எவ்வளவு வாதாடியும், அவரை அனுமதிக்கவில்லை. பின், அவர், தன் சட்டையின் கைகளை வெட்டி, அரை கையாக அணிந்து, தேர்வெழுத சென்றார். இந்த சம்பவம் மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தேர்வு மேற்பார்ளையாளரிடம் கேட்டபோது, எங்கள் வேலையை நாங்கள் செய்துள்ளோம். முழுக்கை சட்டை, பெரிய பட்டன்கள் உள்ள சட்டை, நகைகள் அணிந்து வரும் மாணவ, மாணவியரை தேர்வு அறைக்குள் அனுமதிக்க வேண்டாமென்று, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்; அதன்படி நடந்துகொண்டோம் என்றார்.
