UPDATED : மே 24, 2016 12:00 AM
ADDED : மே 24, 2016 10:01 AM
திருப்பூர்
:
அனுப்பர்பாளையம், கனரா வங்கியின்
கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், கம்ப்யூட்டர், டேலி 2, போட்டோகிராபி
மற்றும் வீடியோகிராபி பயிற்சி, இலவசமாக
நடத்தப்படுகிறது.
இதற்காக, நாளை, நாளை மறுதினம் நேர்முக தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பு முடித்த, 20 முதல், 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு, எவ்வித கட்டணமும் இல்லை. மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
ஒரு
தாளில், பெயர், முகவரி, விரும்பும்
பயிற்சி ஆகியவற்றை குறிப்பிட்டு, குடியிருப்பு
சான்று, அடையாள சான்று,
பள்ளி மாற்று சான்று, சாதி சான்று, வங்கி கணக்கு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஐந்து, ஆகியவற்றை இணைத்து, கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,
அனுப்பர்பாளையம், திருப்பூர் 641 652 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ
அனுப்பலாம்.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 0421 2256 626, 94890 43923 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, நிலைய இயக்குனர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
