விரைவில் தேர்வு முடிவு; மதுரை காமராஜ் பல்கலை ’சுறுசுறு’
விரைவில் தேர்வு முடிவு; மதுரை காமராஜ் பல்கலை ’சுறுசுறு’
UPDATED : மே 24, 2016 12:00 AM
ADDED : மே 24, 2016 10:18 AM
மதுரை
:
மதுரை காமராஜ் பல்கலையில் ஓராண்டுக்கும் மேலாக இழுபறியில் நீடிக்கும் நேரடி மாணவர்
சேர்க்கையில், 200 பேருக்கு முடிவு
அறிவிக்கப்படவுள்ளது.
இப்பல்கலை தொலை நிலைக் கல்வியில் 2014- 15ம் ஆண்டில் 1916 மாணவர்கள் நேரடி சேர்க்கை மூலம் தேர்வு எழுதினர். இச்சேர்க்கையில் பெரும்பாலான மாணவர்கள் போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்தும், அதற்காக தொலை நிலைக் கல்வி மையங்களுக்கும், பல்கலையிலுள்ள சில முக்கிய நபர்களுக்கு ரூ.பல லட்சம் வழங்கியதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. நியாயமான முறையில் தேர்வு எழுதிய நுாற்றுக்கும் மேற்பட்டவர்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் சான்றிதழ் உண்மை தன்மை அறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மே 20க்குள் சந்தேக விண்ணப்பதாரர்களின் உண்மை சான்றிதழ்களை சமர்ப்பிக்க பல்கலை கல்வி மையங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
சிண்டிகேட்
உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,
அந்த ஆண்டில்
எழுதியவர்களில் 200 பேர் நியாயமாக
எழுதியது தெரிய வந்துள்ளது. 400 பேரின்
சான்றிதழ்களில் ஒரு சில சந்தேகங்கள் உள்ளன. அதுகுறித்து அவர்களிடம் விளக்கம்
கேட்கப்பட்டுள்ளது.
இவை தவிர மீதமுள்ளவர்கள் போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்து எழுதியிருக்க வாய்ப்புள்ளது. தொடர் விசாரணை நடக்கிறது. நியாயமாக எழுதிய 200 பேரின் தேர்வு முடிவு சில நாட்களில் வெளியிடப்படும், என்றார்.
