நிகர்நிலை பல்கலை வேந்தர் நியமனம் யு.ஜி.சி., புது உத்தரவு
நிகர்நிலை பல்கலை வேந்தர் நியமனம் யு.ஜி.சி., புது உத்தரவு
UPDATED : மே 26, 2016 12:00 AM
ADDED : மே 26, 2016 10:36 AM
அ நிறம் | அளவு
கடந்த 2014, ஜனவரியில் நடந்த பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) கூட்டத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர்களாக அதன் உரிமையாளர்கள், ஆதரவு பெற்ற நபர்களை நியமிக்க கூடாது; கல்வியாளர் அல்லது சமூகத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தவர்களை தான் நியமிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது.
இந்த உத்தரவை சமீபத்தில் நடந்த கூட்டத்தில் யு.ஜி.சி., திரும்பப் பெற்றது. தவிர, நிகர்நிலை பல்கலையில் இணை துணை வேந்தர் பதவியை நீக்கியது. தொலை துார கல்வி திட்டத்தை நடத்தவும் அனுமதி மறுத்தது.
இது குறித்து தஞ்சை சாஸ்திரா பல்கலை., டீன் வைத்யா சுப்ரமணியம் கூறுகையில், தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் நிகர்நிலை பல்கலைக்கு தொலை துார கல்வியை நடத்த அனுமதி மறுத்தது சரியல்ல,என்றார்.
