தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/65 வயதில் தேர்ச்சி அசத்தும் ஆயுள் கைதி

65 வயதில் தேர்ச்சி அசத்தும் ஆயுள் கைதி

65 வயதில் தேர்ச்சி அசத்தும் ஆயுள் கைதி


UPDATED : மே 26, 2016 12:00 AM

ADDED : மே 26, 2016 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2016 12:00 AM ADDED : மே 26, 2016 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி
: திருச்சி மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை பெற்ற இரு முதியவர்
10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், திருச்சி மத்தியசிறையிலிருந்து 51 பேர் தேர்வு எழுதினர். இதில், 47 பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறையிலிருந்து தேர்வு எழுதியவர்களில், கரூரைச் சேர்ந்த சுப்பிரமணி, 65, என்பவர், 264 மதிப்பெண்ணும், துறையூர் கூத்தம்பாடியைச் சேர்ந்த கந்தன், 61, என்ற முதியவர், 311 மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் இரு வரும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள். திருச்சி சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர்கள். 

கரூரைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் சரவணன், 412 மதிப்பெண் எடுத்து சிறைக் கைதிகளில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வில், தமிழகத்தில் அதிக வயதில் தேர்ச்சி பெற்றவர் என்ற சாதனையை ஆயுள் தண்டனைக் கைதி சுப்பிரமணி படைத்துள்ளார்.

100 சதவீதம் தேர்ச்சிவேலுார் ஆண்கள் சிறையில், ஒன்பது பேரும், பெண்கள் தனிச்சிறையில், எட்டு பேரும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியதில், அனைவரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். ஆண்கள் சிறையில் தேர்வு எழுதிய ஒன்பது பேரில், பால்ராஜ் என்ற ஆயுள் கைதி, 337 மதிப்பெண்கள் பெற்று, முதல் இடத்தை பெற்றிருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us