தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத்தேர்வில் பின்தங்கும் சென்னை மாநிலம்

பொதுத்தேர்வில் பின்தங்கும் சென்னை மாநிலம்

பொதுத்தேர்வில் பின்தங்கும் சென்னை மாநிலம்


UPDATED : மே 26, 2016 12:00 AM

ADDED : மே 26, 2016 11:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2016 12:00 AM ADDED : மே 26, 2016 11:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில், மாநிலத்திலேயே மிகவும் குறைந்தபட்சமாக, ஒரே ஒரு மாணவி மட்டுமே, மாநில, ரேங்க் பெற்றுள்ளார். இதனால், சென்னை கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

சில ஆண்டுகளாக

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், சென்னை மாநகரில் உள்ள பள்ளிகள், பெரும்பாலும் மாநில ரேங்க்கில் முக்கிய இடங்களை பிடிப்பது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளாக, சென்னை கொஞ்சம், கொஞ்சமாக பின்தங்கி வருகிறது.

சென்னையில் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரித்து, அதிக கட்டணம் வசூலிக்கும் நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்ச்சி சதவீதத்திலும், சென்னை மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

சென்னையில், தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால், அரசு பள்ளிகள் மேலெழுந்து வர முடியாமல் தவிக்கின்றன. சென்னையில் கல்வித் துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும், அரசியல்வாதிகள் மற்றும் கல்வித் துறையின் உயரதிகாரிகளின் செல்வாக்கு பெற்றவர்களாகவும், அவர்களின் உத்தரவு படி பணிகளை மேற்கொள்வதிலும், பொழுதை கழிப்பதாக புகார் உள்ளது.

இதை உணர்த்தும் விதமாகவே, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சென்னையில் அரசு பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளும் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளன. இனி வரும் காலங்களில், சென்னை வாசிகள் பிற மாவட்டங்களுக்கு சென்று, தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் சூழல் வருமோ என, பெற்றோர் அச்சமடைந்து உள்ளனர்.

20வது இடத்தில்

நேற்று வெளியான, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், மாநில, ரேங்க் பிடித்த, 285 பேரில், சென்னை, வேப்பேரி, டவுட்டன் பெண்கள் பள்ளி ஜானவி ஸ்ரீதர் என்ற மாணவி மட்டும், 497 மதிப்பெண் பெற்று, ரேங்க் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். தேர்ச்சி சதவீதத்திலும் சென்னை, 94.25 சதவீதத்துடன், 20வது இடத்தில் தான் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us