UPDATED : மே 27, 2016 12:00 AM
ADDED : மே 27, 2016 11:05 AM
கோவை
: பிரதமர்
திட்டத்தின் கீழ், 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு
திறன்மேம்பாடு பயிற்சி நிறைவு செய்துள்ள, தமிழக
ஜவுளித்தொழில் துறையினருக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
தொழில்
வளர்ச்சியில் இந்தியா பின்தங்கியுள்ளதற்கு, திறன் குறைபாடு முக்கிய காரணமாக உள்ளதை அறிந்த, பிரதமர் மோடி, பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா என்ற பிரத்யேக திறன் மேம்பாடு திட்டத்தை
அறிவித்தார். வரலாற்றில் முதல் முறையாக, திறன்
மேம்பாடுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது.
முதல் கட்டமாக
நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் முக்கிய, 40 தொழில் துறைகள்
தேர்ந்தெடுக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு
பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. தமிழக ஜவுளித்தொழிலில் புதிய தொழிலாளர்கள்,
15 ஆயிரத்து 500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, 45 நாட்கள் பயிற்சி தரப்பட்டது. இதற்காக, 120 மில்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன.
பயிற்சியை
நிறைவு செய்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் சான்றிதழ்
வழங்கப்பட்டுள்ளதுடன், 14 ஆயிரத்து 400 பேருக்கு மில்களில் வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. அரசின்
திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளதற்கு தமிழக ஜவுளித்துறையினருக்கு மத்திய அரசு
பாராட்டு தெரிவித்துள்ளதுடன், அடுத்த கட்ட பயிற்சிக்கு தேவையான
உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளது.
&'இந்தியன்
டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் (ஐ.டி.எப்)&' செயலாளர் பிரபு
தாமோதரன் கூறியதாவது:
வரும்,
2025ல் வேலைவாய்ப்பு திறனுடன் இளைஞர்களை அதிகம்
கொண்ட நாடாக இந்தியா விளங்கும். இதற்கேற்ப அடுத்த, ஒன்பது ஆண்டுகளில், 10 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க
வேண்டியது அவசியம். உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கினால் மட்டுமே, இது சாத்தியம்.
மத்திய அரசு
திறன் மேம்பாடு பயிற்சியால் அனைத்து தொழில்துறையினரும் பயனடைந்து வருகின்றனர்.
நானும், எங்கள் அமைப்பின் இயக்குனர்கள்,
ஸ்ரீஹரி பாலகிருஷ்ணன், மனோஜ்குமார், கணேஷ்பாபு உள்ளிட்டோர் டில்லியில்,
திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜிவ்
பிரதாப் ரூடியை சந்தித்து பேசினோம்.
மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கு வாழ்த்து தெரிவித்தார். ஸ்பின்னிங் மில்களில், 18 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும், குறைந்தபட்சம், ஐந்து பிரிவுகளில் பயிற்சி அளிக்க தயாராக உள்ளோம். இத்தகைய பயிற்சி நிறைவு செய்வோருக்கு பட்டய படிப்புக்கு இணையான ஒரு சான்றிதழ் வழங்க வேண்டும்.
மத்திய அரசு திட்டத்தின்கீழ், பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படுவது குறித்து, பல்வேறு மாவட்டங்களில் மாதிரி மையங்கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
