பட்டதாரிகளை ஏமாற்றியதாக ‘எல் அண்ட் டி’ மீது புகார்
பட்டதாரிகளை ஏமாற்றியதாக ‘எல் அண்ட் டி’ மீது புகார்
UPDATED : மே 28, 2016 12:00 AM
ADDED : மே 28, 2016 10:55 AM
சென்னையில் உள்ள, ’எல் அண்டு டி’ நிறுவனம், 1,500 சாப்ட்வேர் பட்டதாரிகளை, 18 மாதங்கள் காக்க வைத்து ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, அறிவுசார் தொழில் முறை வல்லுனர்கள் பேரவை அமைப்பினர் கூறியதாவது: ’எல் அண்டு டி இன்போடெக்’ நிறுவனம், 2014ல், பொறியியல் கல்லூரிகளில் வளாக தேர்வு நடத்தி, 5,800 பேருக்கு விருப்பப் பணியாணை தந்தது. அதில், 1,500 பேரை மட்டும் வேலைக்கு அமர்த்தாமல், 18 மாதங்களாக இழுத்தடித்து வந்தது. அதை நம்பி அத்தனை நாட்களும் சம்பளம் இன்றி அவர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு திடீரென வளாக தேர்வு, நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெறாததாக கூறி, 90 சதவீதம் பேரை வெளியேற்றி விட்டது. இதனால், ஒன்றரை ஆண்டு பணி அனுபவம் கிடைக்காமல் வீணாகிப் போனது; சம்பளமும் இல்லை. எனவே, 1,500 பேரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் தலையிட்டு அவர்கள், வேலை வாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
