தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகள் திறக்கப்படுவதால் பழநியில் குவிந்த பக்தர்கள்

பள்ளிகள் திறக்கப்படுவதால் பழநியில் குவிந்த பக்தர்கள்

பள்ளிகள் திறக்கப்படுவதால் பழநியில் குவிந்த பக்தர்கள்


UPDATED : மே 30, 2016 12:00 AM

ADDED : மே 30, 2016 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2016 12:00 AM ADDED : மே 30, 2016 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ளதால் நேற்று ஞாயிறு பழநியில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோயிலில் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு பழநி மலைக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். ஜூன் 1ல் பள்ளிகள் திறக்க உள்ளதால் நேற்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் தீர்த்தக்குடங்கள்,காவடிகள், பால்குடங்கள் உடன் குவிந்தனர். இதனால் வின்ச், ’ரோப்கார்’ ஸ்டேஷன்களில் 2 மணிநேரம் வரை காத்திருந்து மலைக் கோயிலுக்கு சென்றனர்.

வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில் 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் பொதுதரிசன வழியில் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். இதைப் போலவே இரவு 7 மணிக்கு தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us