தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விதிமீறல்; 181 பள்ளி வாகனங்கள் மீது அபராதம்

விதிமீறல்; 181 பள்ளி வாகனங்கள் மீது அபராதம்

விதிமீறல்; 181 பள்ளி வாகனங்கள் மீது அபராதம்


UPDATED : ஜூன் 01, 2016 12:00 AM

ADDED : ஜூன் 01, 2016 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2016 12:00 AM ADDED : ஜூன் 01, 2016 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குழுவாக இணைந்து கடந்த மே
24ல் ஒரே நாளில் 892 பள்ளி வாகனங்களை சோதனை செய்தனர். 

181 வாகனங்களில் விதிமீறல் கண்டறிந்து சோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாகனங்கள் ஆய்வுக்கு (எப்.சி.) வரும்போது ரூ.2 லட்சத்து ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்படும்.

மதுரையில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் 1092 உள்ளன. கலெக்டர் வீரராகவராவ் உத்தரவுப்படி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிங்காரவேல், பாஸ்கரன், கல்யாணகுமார் ஆகியோர் தலைமையில் தடையின்மை சான்று வழங்குவதற்காக கடந்த மே 24ல் ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 

விதிமீறல் கண்டுபிடிப்பு

இரண்டு கட்டமாக 892 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் 181 வாகனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டன. இவ்வாகனங்கள் தகுதி சான்று பெற (எப்.சி.) வரும்போது ரூ.2 லட்சத்து 1,600 அபராதம் வசூலிக்கப்படும். இன்னும் 208 வாகனங்கள் ஆய்வு செய்யப்படாமல் உள்ளன. இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த வாகனங்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்குபின் இயக்கப்படும்.

ரூ.9 லட்சம் வசூலிப்பு

ஜன., முதல் ஏப்., வரையில் வரி பாக்கி வைத்திருந்த 181 வாகனங்கள் மீது ரூ.9 லட்சத்து 76 ஆயிரத்து 172 வசூலிக்கப்பட்டது. தவிர வாகன சோதனையின் போது, விதிமீறல் தொடர்பாக ரூ.7,400 உடனடி அபராதம் வசூலிக்கப்பட்டது. பள்ளி குழந்தைகளை பாதுகாப்புடன் அழைத்து செல்வது குறித்து பஸ், வேன், ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. சிறந்த டிரைவர்களுக்கு இந்தாண்டு சிறப்பு பரிசு, நற்சான்று பத்திரம் வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்டோ ஜாக்கிரதை

ஆட்டோ ஒன்றில் பயணி மூவர் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. பள்ளி குழந்தைகள் ஐந்து பேருக்கு மேல் ஏற்றக்கூடாது. முன் இருக்கையில் அமரவும், பக்கவாட்டு பகுதிகளில் புத்தகப்பைகளை தொங்க விடவும் அனுமதியில்லை. அனுமதிக்கப்பட்ட வேகத்தில் செல்ல வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us