UPDATED : ஜூன் 01, 2016 12:00 AM
ADDED : ஜூன் 01, 2016 11:12 AM
திண்டுக்கல்
: இந்தோனேசியாவில் நடந்த சர்வதேச யோகாசன போட்டியில் திண்டுக்கல் மாணவி
அவந்திகா உட்பட 6 பேர் தங்கம் வென்று சாதனை
படைத்துள்ளனர்.
திண்டுக்கல் பார்வதிஸ் அனுகிரஹா இன்டர்நேஷனல் பள்ளி மாணவி அவந்திகா. இவர் சுவாமி விவேகானந்தா யோகா வித்யாலயா மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். கடந்த டிசம்பரில் கோவையில் நடந்த மாநில போட்டி, கோவில்பட்டியில் நடந்த தேசிய போட்டிகளில் தங்கம் வென்றார்.
இந்தோனேஷியா யோகாசன கூட்டமைப்பின் சார்பில், கடந்த மே 14 முதல் 29 வரை அந்நாட்டில் உள்ள பாலி, ஜகர்த்தா, மேடன் நகரங்களில் சர்வதேச டி-20 யோகாசன போட்டிகள் நடந்தன. இதில் இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 150 பேர் பங்கேற்றனர்.இந்திய அணியின் சார்பில் 15 பேர் தங்கம் வென்றனர்.
இவர்களில், தமிழகத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ரெட்விக், நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த காளிப்பாண்டி, அருண்குமார், ஈரோடு அரவிந்த், திருப்பூர் வைஷ்ணவி, திண்டுக்கல் அவந்திகா ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றிருந்தனர்.
