UPDATED : ஜூன் 02, 2016 12:00 AM
ADDED : ஜூன் 02, 2016 10:47 AM
அ நிறம் | அளவு
அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராமின் பதவிக்காலம், மே 26ம் தேதி முடிந்தது. ஆனால், புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தமிழக அரசு சார்பில் இன்னும் தேடல் குழு அமைக்கப்படவில்லை.
உயர்கல்வி துறை செயலர் அபூர்வா தலைமையில், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் மதுமதி மற்றும் கிண்டி இன்ஜி., கல்லுாரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய துணைவேந்தர் வரும் வரை, இந்த குழு அண்ணா பல்கலையின் நிர்வாக பணிகளை மேற்கொள்ளும். அதேநேரம், புதிய துணைவேந்தர் இல்லாததால், பட்டமளிப்பு விழாவை நடத்த முடியாத சிக்கல் உள்ளது.
