UPDATED : ஜூன் 03, 2016 12:00 AM
ADDED : ஜூன் 03, 2016 10:12 AM
அ நிறம் | அளவு
வேளச்சேரி
:
மாநில அளவிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், 750 வீரர், வீராங்கனைகள் இன்று பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு
நீச்சல் சங்கம் சார்பில், மாநில அளவிலான, 33வது சப் - ஜூனியர், 43வது ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப்
போட்டிகள், வேளச்சேரி எஸ்.டி.ஏ.டி., நீச்சல் வளாகத்தில் நடைபெற உள்ளன. போட்டிகள், இன்று காலை, 7:00 மணிக்கு துவங்கி, வரும், 5ம் தேதி வரை நடைபெற உள்ளன. நீச்சல்,
டைவிங், வாட்டர் போலோ ஆகிய போட்டிகள் நடக்கவுள்ளன.
அவற்றில், 480 வீரர்கள், 270 வீராங்கனைகள் என, மாநிலம் முழுவதும் இருந்து, மொத்தம், 750 பேர் பங்கேற்கின்றனர்.
