UPDATED : ஜூன் 03, 2016 12:00 AM
ADDED : ஜூன் 03, 2016 10:37 AM
அ நிறம் | அளவு
கோவை
: ஸ்ரீ
கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் ராகிங் தடுப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி
நடந்தது.
மாணவர்கள், ராகிங் வன்கொடுமை செயல்களை செய்ய மாட்டோம் என, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன் பேசுகையில், ராகிங் செயல் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
இது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பாதிக்கிறது, என்றார். கல்லுாரி முதல்வர் பாபா ஞானகுமார், துணை முதல்வர் விஜய சாமுண்டீஸ்வரி, பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
