UPDATED : ஜூன் 04, 2016 12:00 AM
ADDED : ஜூன் 04, 2016 10:23 AM
அ நிறம் | அளவு
உடுமலை
: உடுமலை,
திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி
நிறுவனத்தில் ஆண்டு விழா மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா
நடந்தது.
கடந்த கல்வியாண்டு, 2015-16ம் ஆண்டுக்கான ஆண்டுவிழா மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது. மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தன் தலைமை வகித்தார்.
பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியாண்டு மாணவர்கள், தங்களின் இரண்டாண்டு கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பேராசிரியர்கள் மாணவர்களுக்கு, தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும், ஆசிரியர் தகுதி தேர்வுகளில் வெற்றிபெறுவது குறித்தும் ஆலோசனை வழங்கினர். விழாவை, பேராசிரியர் சரவணக்குமார் ஒருங்கிணைத்தார்.
