தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நூறு சதவீதம் பெற்ற அரசுப்பள்ளி; மாணவர் எண்ணிக்கை சரிவு

நூறு சதவீதம் பெற்ற அரசுப்பள்ளி; மாணவர் எண்ணிக்கை சரிவு

நூறு சதவீதம் பெற்ற அரசுப்பள்ளி; மாணவர் எண்ணிக்கை சரிவு


UPDATED : ஜூன் 07, 2016 12:00 AM

ADDED : ஜூன் 07, 2016 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2016 12:00 AM ADDED : ஜூன் 07, 2016 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை
: தொடர்ந்து இரண்டு முறை
, நுாறு சதவீத தேர்ச்சி, அனைத்து அடிப்படை வசதிகள் இருந்தும்; மாணவர்களின் எண்ணிக்கையில் மட்டும் தொடர் சரிவு; போக்குவரத்து வசதியில்லாத காரணத்தால் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பாப்பான்குளம் அரசு உயர் நிலைப்பள்ளி.

உடுமலையிலிருந்து மடத்துக்குளம் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது பாப்பான்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி. நடுநிலையிலிருந்து, உயர்நிலையாக கடந்த, 2011ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. அப்போது இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை, 200 ஆக இருந்தது.

தற்போது இப்பள்ளியில் ஆண்டு தோறும், எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு செல்வதில், குறைந்தபட்சமாக, பத்து மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றுச்சான்றிதழ் வாங்கிச்செல்கின்றனர். நடுநிலை வரை மட்டுமே, குழந்தைகளை இப்பள்ளியில் படிக்க வைக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மடத்துக்குளத்திலிருந்து பஸ் வசதி இல்லை இப்பள்ளிக்கு, மடத்துக்குளத்திலிருந்து பஸ் வசதி இல்லாத காரணத்தால், பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை தொலைதுாரம் நடந்து செல்வதை தவிர்க்க, வேறு பள்ளிகளை நாடுகின்றனர்.

இதனால், அருகிலுள்ள இப்பள்ளியை விடுத்து, உடுமலை வரை அனுப்புகின்றனர். இப்பள்ளிக்கு, நாள்தோறும், உடுமலையிலிருந்து பள்ளி நேரத்துக்கு அரசு பஸ் ஒன்றும், இரண்டு தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. மடத்துக்குளத்திலிருந்து அதுவும் இயக்கப்படுவதில்லை. 

பாப்பான்குளம் அருகில், சாலரப்பட்டி, போத்தநாயக்கனுார், ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இப்பள்ளிக்கு மாணவர்கள் வருகின்றனர். மடத்துக்குளத்திலிருந்து, உடுமலைக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் இப்பகுதிகளின் வழியாக செல்லும் பட்சத்தில், குழந்தைகள் இப்பள்ளிக்கு வர வசதியாக இருக்கும்.

தற்போது, எட்டாம் வகுப்பு வரை, சிறப்பு வகுப்புகள் எதுவும் இல்லாததால், பல மாணவர்கள் தொலைதுாரம் நடந்து சென்று பள்ளிக்கு வந்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய சூழலில் உடல்நலமும் அவசியம் என்பதால், பெற்றோர் இப்பள்ளியை புறக்கணிக்கின்றனர்.

தவிர, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், மாலையிலும் சிறப்பு வகுப்புகள் நடப்பதால், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு வருவதிலும், மாலை நேரத்தில் வீட்டுக்கு செல்வதிலும் சிக்கல் உள்ளது.

இத்தகைய காரணங்களால் இப்பள்ளியில் தொடர்ந்து இரண்டு முறை நுாறு சதவீத தேர்ச்சி பெற்றிருந்தும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மாற்றாக சரிவை நோக்கி செல்கிறது. துவக்கப்பள்ளி வளாகத்தில் தான் உயர்நிலைப்பள்ளியும் செயல்படுகிறது.

இதனால், ஆறாம் வகுப்புகளுக்கு துவக்கப்பள்ளியிலுள்ள மாணவர்கள் அப்படியே சேர்க்கப்படுகின்றனர். அக்குழந்தைகள் எட்டாம் வகுப்பு முடிந்த உடனே, பஸ் வசதியில்லாததால், சுற்றுப்பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்கு வேறு பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்கின்றனர்.

தேர்ச்சி சதவீதம், அடிப்படை வசதிகள், ஆசிரியர் என அடிப்படை வசதிகள் இருப்பினும், மாணவர் எண்ணிக்கையில் பின்தங்கியே உள்ளது. கடந்த இரண்டாண்டுகளாகவே இப்பிரச்னை குறித்து, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து கழகத்துக்கு தொடர் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், பல்வேறு காரணங்களை கூறி, பஸ் இயக்கப்படாமல் இருப்பது, பள்ளி நிர்வாகத்தினரை வேதனைக்குள்ளாகியதோடு, மாணவர்களின் எண்ணிக்கை மேலும் குறைய வழிவகுத்துள்ளது.

பள்ளி நேரத்திலாவது பஸ் இயக்க வேண்டும் பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், போக்குவரத்து கழகத்தினர் பள்ளி நேரத்துக்காவது, ரெட்டியார்பாளையம், போத்தநாயக்கனுார், சாலரப்பட்டி இவ்வழித்தடங்களில் பஸ் இயக்கினால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இப்பகுதிகளிலிருந்தே அதிகமான மாணவர்கள் இங்கு வருகின்றனர். 

தற்போது, பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நேரத்தில் பஸ்களும் இயக்கப்படுவதால், பள்ளியின் தரத்தையும், மாணவர் எண்ணிக்கையிலும் மேம்படுத்த முடியும், என்றனர்.

போக்குவரத்து கழகத்தினர் கூறுகையில், அவ்வழித்தடத்தில் இயக்கப்படுவது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us