தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டு விடுதி சேர்க்கை; 2ம் கட்ட தேர்வு

விளையாட்டு விடுதி சேர்க்கை; 2ம் கட்ட தேர்வு

விளையாட்டு விடுதி சேர்க்கை; 2ம் கட்ட தேர்வு


UPDATED : ஜூன் 08, 2016 12:00 AM

ADDED : ஜூன் 08, 2016 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2016 12:00 AM ADDED : ஜூன் 08, 2016 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை
: விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான
, இரண்டாம் கட்ட விளையாட்டு தேர்வில், தகுதி வாய்ந்தவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான் வெளியிட்டுள்ள அறிக்கை:

விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்கென தமிழகம் முழுவதும், உணவு மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய, 23 விளையாட்டு விடுதிகள் மற்றும் ஐந்து விளையாட்டு பள்ளிகள் செயல்படுகின்றன.

இவ்விடுதிகளில், ஆண்டுதோறும் ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பிளஸ்  1 வகுப்பு மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.

நடப்பாண்டு சேர்க்கைக்கான, மாநில அளவிலான விளையாட்டு தேர்வில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 24 பேர் விளையாட்டு விடுதியில் சேர தகுதி பெற்றனர்.

இந்நிலையில், இரண்டாம் கட்ட விளையாட்டு தேர்வு, சென்னை நேரு ஸ்டேடியம், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் வரும், 17ல் துவங்கி, 19ல் முடிகிறது.

அதில், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், டேபிள்டென்னிஸ், டென்னிஸ், ஜூடோ, கபடி, வாலிபால், ஹாக்கி, நீச்சல், த்ரோபால் மற்றும் பளுதுாக்குதல் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ, மணவியர் பங்கேற்கலாம். குறிப்பாக, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வென்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதற்கான விண்ணப்பத்தினை, www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் விளையாட்டில் பங்கேற்ற அசல் சான்றுகளுடன், விளையாட்டு தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தகுதிவாய்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனையருக்கு நேரிடையாக விளையாட்டு தேர்வு நடத்தப்பட்டு, விடுதியில் சேர அனுமதிக்கப்படவும் உள்ளது. இவ்வாறு, நோயலின்ஜான் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us