தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மதுரை மாணவர்

தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மதுரை மாணவர்

தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மதுரை மாணவர்


UPDATED : ஜூன் 09, 2016 12:00 AM

ADDED : ஜூன் 09, 2016 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2016 12:00 AM ADDED : ஜூன் 09, 2016 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்
: தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் மதுரையை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதுரை பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் பிரபு, லாவண்யா. இவர்களின் மகன் சித்தார்த்,13. மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சித்தார்த் நீச்சல் போட்டியில் ஆர்வம் காட்டியதால், தந்தை பிரபு, ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் பயிற்றுனரான எஸ்.ராஜேஷ் மூலம் ராமநாதபுரம் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில் 60 நாட்கள் பயிற்சி அளித்தார்.

பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட சித்தார்த், ராமநாதபுரம் மாவட்டம் சார்பில், சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில், கடந்த 3, 4, 5ம் தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான சப் -ஜூனியர் நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.

200 மீட்டர் தனிநபர் போட்டியில் 3-வது இடம் பெற்று வெண்கலப்பதக்கம் பெற்றார். 50 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் 3ம் இடம் பெற்றார். 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் 2ம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

இதையடுத்து, ஜூன் 29ல் பெங்களூருவில் நடக்கும் தேசிய நீச்சல் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க சித்தார்த் தேர்வு செய்யப்பட்டார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us