அகில இந்திய கூடைப்பந்து போட்டி; ஓ.என்.ஜி.சி., அணி வெற்றி
அகில இந்திய கூடைப்பந்து போட்டி; ஓ.என்.ஜி.சி., அணி வெற்றி
UPDATED : ஜூன் 09, 2016 12:00 AM
ADDED : ஜூன் 09, 2016 10:45 AM
துாத்துக்குடி
:
துாத்துக்குடியில் நடந்த அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் டேராடூன்
ஓ.என்.ஜி.சி., அணி வெற்றி பெற்று கோப்பையை பெற்றது.
துாத்துக்குடியில் ஜூன் 3 முதல் 7 ம் தேதி வரை அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியை கூடைப்பந்து கழகமும், ஸ்டெர்லைட் நிறுவனமும் இணைந்து நடத்தியது.
இதில் ஆண்கள் பிரிவில் 8 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்கு பெற்றது. இதில் பெண்கள் பிரிவில் கேரள மின் வாரிய அணி முதலிடமும், சென்னை தென்னக ரயில்வே அணி இரண்டாம் இடமும் பெற்றது.
செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணி மூன்றாம் இடமும், கோல்கட்டா கிழக்கு ரயில்வே அணி நான்காம் இடம் பெற்றது.
ஆண்கள் பிரிவில் டேராடூன் ஓ.என்.ஜி.சி., அணி முதலிடமும், கேரள மின் வாரிய அணி இரண்டாம் இடமும் பெற்றது. சென்னை வருமானவரித்துறை அணி மூன்றாம் இடமும், வாரணாசி டி.எல்.டபிள்யூ அணி நான்காம் இடமும் பெற்றது.
முதலிடத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடத்திற்கு 40 ஆயிரம், மூன்றாம் இடத்திற்கு 30 ஆயிரம், நான்காம் இடம் பெற்ற அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும், வெற்றி கோப்பையும் வழங்கப்பட்டது. பரிசுகளை துாத்துக்குடி எஸ்.பி., அஸ்வின் கோட்னீஷ் வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கூடைப்பந்து கழக தவைர் சுஷேஸ்ராஜா, செயலர் சுந்தர மகாராஜன், பொருளாளர் சரவணன் செய்திருந்தனர்.
