மாணவர் சேர்க்கைக்கு தயக்கம் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
மாணவர் சேர்க்கைக்கு தயக்கம் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 09, 2016 12:00 AM
ADDED : ஜூன் 09, 2016 10:48 AM
சென்னை
: விடுதலை
சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நேற்று வெளியிட்ட
அறிக்கை:
புதிய கல்வி
உரிமைச் சட்டத்தின்படி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழை
- எளிய மாணவர்களுக்கு, அனைத்துப் பள்ளிகளிலும், 25 சதவீத கட்டணமில்லாக் கல்வி வழங்குவதற்கு, ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அவை நடைமுறையிலும் இருக்கிறது.
ஆனால், தற்போது மைய அரசு பாடத்திட்டத்தின்படி இயங்கி வருகின்ற மைய இடைநிலைக்
கல்விக் கூடங்களில் (சி.பி.எஸ்.இ.,) புதிய கல்வி
உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை எனத்
தெரிய வருகிறது.
அதற்குக்
காரணமாக, அப்பள்ளிகளில் ஏற்கனவே
சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணத்தை, மைய இடை நிலைக் கல்விக் கூடங்களுக்கு, அரசு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டை, அவர்கள் முன்வைத்ததுடன், இவ்வாண்டுக்குரிய,
25 சதவீத மாணவர்களைச் சேர்ப்பதற்கு தயக்கம்
காட்டியும் வருகின்றனர்.
ஆகவே தமிழக அரசு,
இப்பிரச்னையில், உடனடியாகத் தலையிட்டு, சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளுக்கு, புதிய கல்வி உரிமைச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய கல்விக் கட்டணத்தை
உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்சட்டத்தின் கீழ், 25 சதவீத மாணவர்களைச் சேர்க்காத, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மீது, உரிய நடவடிக்கை எடுத்து, அப்பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
