UPDATED : ஜூன் 10, 2016 12:00 AM
ADDED : ஜூன் 10, 2016 10:38 AM
கோவை
: தொடக்க
கல்வித்துறையின் கீழ், பள்ளிகளின் ஆய்வுக்கு, டார்கெட் நியமிக்கும் மந்தமான செயல்முறையால்,
கடந்த ஐந்தாண்டுகளாக கோவை மாவட்டத்தில் மட்டும்,
200 பள்ளிகள் ஒரு முறை கூட ஆய்வுக்கு
உட்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
ஒவ்வாரு ஆண்டும்
மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிகள்
ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை குறித்த, டார்கெட் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு உதவி தொடக்க கல்வி அலுவலரும் ஆண்டுக்கு, 46 பள்ளிகளில் ஆண்டாய்வும், 180 பள்ளிகளில்
பார்வையிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி ஆண்டாய்வு
என்பது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், முழு நாளும் செலவிட்டு மாணவர்களின் வாசிப்பு திறன், எழுத்து மற்றும் பொதுத்திறன், கல்வித்தரம், ஆசிரியர்களின் கற்பித்தல் முறை,
வகுப்பறை செயல்பாடுகள் என, அனைத்து விதமாகவும் துல்லிய ஆய்வுகளை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், பள்ளி பார்வை என்பது ஒரு சில மணி நேரங்கள் பள்ளிகளில் செலவிட்டு
குறிப்பிட்ட சில செயல்பாடுகள் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
கோவை
மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பிரிவின்
கீழ், 846 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆண்டுக்கு,
46 பள்ளிகள் என்ற இலக்கின்படி கணக்கிட்டால்,
அனைத்து பள்ளிகளையும் முழுமையாக ஆய்வு செய்ய,
18 ஆண்டுகள் தேவைப்படும்.
கோவை
மாவட்டத்தில், 15 ஒன்றியங்களில், 26 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில்,
ஐந்தாண்டுகளில், ஒரு முறை கூட முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படாத பள்ளிகள்
பட்டியலில், 200க்கும் மேல் உள்ளதால், கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.
உதவி தொடக்க
கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில், &'கோவை கல்வி மாவட்டத்தில் மட்டும் கடந்த
ஐந்தாண்டுகளில், ஒரு முறை கூட ஆண்டாய்வுக்கு
உட்படுத்தாமல், 200 பள்ளிகளுக்கு மேல் உள்ளன. பள்ளி,
கல்வித் தரத்தை மேம்படுத்த தொடர் ஆய்வுகள்
அவசியம்.
கோவையில், வெறும், பள்ளி பார்வை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள குறிப்பிட்டுள்ள, டார்கெட் படி, நான்கு ஆண்டுகளுக்கு மேல் தேவை. வழக்கமான டார்கெட் முறையில் ஆய்வுகள் முழுமைபெறுவதில்லை.
எனவே, மாவட்டத்துக்கு ஐந்து பேர் கொண்ட சிறப்புக்குழு அமைத்து, நாள் ஒன்றுக்கு இரண்டு பள்ளிகளை ஆண்டாய்வு செய்ய வேண்டும். இதன் படி, ஓராண்டில் அனைத்து பள்ளிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி, தொடர் கண்காணிப்பில் வைக்கமுடியும், என்றார்.
